Saturday, May 8, 2021

அவரை ஊர்- பெங்களூர் உருவான கதை

 


இதென்ன அவரை ஊர் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? பெங்களூர் தான் அவரை ஊர்!

பெங்காலு என்ற ஒரு வித அவரையிலிருந்து உண்டானதாகும் பெங்களூர். இது கன்னடப் பெயர்.

ஒருகாலத்தில் மைசூரை ஆண்டு வந்த வீரப்பன்னாளா என்ற அரசன் வேட்டைக்குச் சென்றபோது தன் பரிவாரங்களிலிருந்து தனியே பிரிந்து, இருளில் வழித்தவறி ஒரு குடிசையை அடைந்தான். அங்கு ஒரு வயதான மூதாட்டி இருந்ததைக் கண்டு தனக்கு உணவு தரும் படி வேண்டினார் அரசர் .

அந்த மூதாட்டியிடம் அச்சமயம் பெங்காலி என்ற அவரையைத் தவிர உணவாகக் கொடுக்க வேறொன்றும் இல்லை. ஆகவே அந்த அவரையை வேகவைத்து அரசனுக்கு பரிமாறினார் மூதாட்டி. அரசனும் அதை உண்டு தன் குதிரைக்கும் கொடுத்தார். மறுநாள் காலையில் தலைநகருக்கு திரும்பியவுடன் அச்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, தனக்கு உதவி செய்த அந்த மூதாட்டிக்கு சன்மானம் அளித்ததுடன், அந்த இடத்தில் ஓர் ஊரையும் உண்டாக்கி, அதற்கு பெங்காலு என்றும் பெயரிட்டார். அப்பெயர் மாறி பெங்களூர் என்றாயிற்று

Wednesday, May 5, 2021

ரசத்தின் மகிமை

 



மிளகு:

     சுவை அரும்புகள் தூண்டுவது; புரதத்தை உடைத்துச் செரிக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொண்டது.

சீரகம்:           

     செரிமானத்திற்கான வயிற்றுச்சுவர்களைச் சரி செய்வது. மனிதத் தேவைக்கான மக்னீசியம் கொண்டது.

பூண்டு:

     கிருமிகளின் முதல் எதிரி. கொழுப்புகளை உடைப்பது; பக்கவாதம் தடுப்பது; ரத்த அழுத்தம் சீர் செய்யும் செலினியம், கால்சியம், பொட்டாசியம்

கொண்டது.

கடுகு:

     எட்டு மடங்கு உமிழ்நீர் சுரக்க வைப்பது; நல்ல கொழுப்பு உடையது.

புளி:

     வயிற்றுக் கோளாறு சரிசெய்து, இருதயம் வலிமை செய்வது.

தக்காளி:

     வெய்யிலுக்கெதிராய்த் தோல்நலம் காப்பது; வைட்டமின் ஏ, டி இரண்டும் உடையது. மாரடைப்பு புற்றுநோய் இரண்டையும் தடுப்பது.

மிளகாய்:

     வைட்டமின் ஏ, சி இரண்டும் கொண்டது. ரத்த ஓட்டம் அதிகரிப்பது.

கருவேப்பிலை:

     தோல் தொற்று தடுப்பது; சிறுநீரக வலி நிவாரணியாய்ச் செயல்படுவது; தாதுக்களும் நார்ச்சத்தும் மிக்கது.

மல்லித்தழை:

     இரும்புச்சத்து மிக்கது; எழும்புத் தேய்மானம் தடுப்பது.

                                           (படித்ததில் பிடித்தது)

நாம் அன்றாடம் உட்கொள்ளும் ரசத்தில் இவ்வளவு மகிமை இருக்கிறது என்று தெரிய வரும் போது ஆச்சரியமாய் இருக்கிறது. நம் முன்னோர்கள் உணவு பொருட்களில் கையாண்டுள்ள அறிவியலும் தெரியவருகிறது.


சிக்கனமும் சேமிப்பும்

 


சிறு துளி பெறுவெள்ளம் போல

     சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!

சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!

     ஓரறிவு எறும்பிற்க்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!

ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!

     உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை

தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்

     சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்

நீ வாழ்க்கை என்னும் படியை

வெற்றியுடன் தாண்ட முடியும்!

சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ

     விரும்பிய படி கொண்டு செல்லலாம்!

சிக்கனமாய் இரு! சேமித்து பழகு!


அலெக்சாண்டரின் அறிவுக்கண் திறந்த நிமிடம்

 


மாவீரர் அலெக்சாண்டரின் ஆசிரியராக விளங்கியவர் தத்துவமேதை டயோ ஜெனீஸ். இவர் ஒரு நாள் இரண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அலெக்சாண்டர் ஆசிரியர் அவர்களே மண்டை ஓடுகளை பார்த்து என்ன செய்து கொண்டுருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர் இந்த இரண்டு மண்டை ஓடுகளுக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்……என்றார். அலெக்சாண்டரும் பார்த்து விட்டு எந்த வேருபாடும் இல்லை என்றார். அதற்கு ஆசிரியர்…. இந்த இரண்டில் ஒன்று உன் தந்தையுடையது. மற்றொன்று அவரது அடிமையுடையது. எது உன் தந்தையுடையதாக இருக்கும் என்று கண்டுபிடிக்க முயன்றேன். முடியவில்லை….. என்றார் இதை கேட்டதும் ஆணவம் மிக்க அலெக்சாண்டரின் அறிவுக் கண்கள் திறந்தன.