Saturday, November 27, 2021

விவசாயம் சிந்திக்க

 

             

      

ஒரு கத சொல்லுவாங்க ஊர்ல.

எமலோகம் இருக்கே எமலோகம் அங்க பாவ புண்ணியக் கணக்குப் பாப்பாங்களாம்.பாவம் பண்ணுன ஆளுக இடபக்கம் நிப்பாகளாம்; புண்ணியம் பண்ணுன ஆளுக வல பக்கம் நிப்பகளாம்.

புண்ணியம் செஞ்சவக சொர்க்கத்துகுப் போங்கன்னு அனுப்பிச்சிருவாகளாம்; ஊர்வசி ரம்பையெல்லாம் வருவாகளாம் ஒத்தாசைக்கு.

பாவம் செஞ்ச ஆளுகள எமதர்மன் ஆளுக ரெண்டு கையும் புடிச்சி ‘வாங்கய்யா வாங்க’ன்னு கூட்டிட்டுப் போயிக் கொதிக்கற எண்ணெய்க் கொப்பரையில வீசுவாகளாம்;பாம்பு புத்துக்குள்ள படுக்கப் போடுவாகளாம்;எரியற தீயில தலைகீழாக் கட்டித் தொங்கவிடுவாகளாம்.

இப்படி எமதர்மன் ‘நல்லாட்சி’ நடத்தி வந்த காலத்துல ஒரு நாளு பெருங்கூத்தாகிப் போச்சாம் எமலோகத்துல.

அந்த வருசம் ஏடு போட்டுப் பாத்ததுல புண்ணியம் பண்ணுனவக ஏழெட்டுப் பேர்தானாம். பாவம் பண்ணுனவக பட்டியல் எடுத்து பாத்தா அது போகுதாம் லட்சக்கணக்குல.

எமதருமருக்கு தல சுத்துது;கூடவே கிரீடமும் சேந்து சுத்துது.

கொப்பர கட்டுபுடியாகுமா எண்ணெ விக்கிற வெலையில?

அத்தன பாம்புகளுக்கு எங்க போறது? நாகலோகத்துல வேற நாலுமாசமாப் பாலுக்கு வெல கூட்டச் சொல்லிப் பசுமடுக வேல நிறுத்தமாம்.

புத்திக்கு ஒண்ணும் எட்டல; யாரை யோசனை கேக்கறது?

சிவபெருமானைக் கேக்கலாம்ன்னா மார்க்கண்டேயன் விவகாரத்துல ஏற்பட்ட

மனதாங்கல் இன்னும் தீரல.

விஷ்ணுவப் போய்க்கேட்டு வரலாம்னா நம்ம எருமைக்குப் பாற்கடல் நீந்திப் பழக்கம் இல்ல. பிரம்மாவப் போய்க் கேக்கலாம்னா அந்தாளு எந்த மூஞ்சிய எங்க வச்சிருப்பாருன்னே தெரியமாட்டேங்குது.

ஒண்ணும் புடிபடல எமதருமருக்கு.

பாசக்கயித்துல அவரா முடிச்சிப் போட்டு அவரா அவுத்துக்கிட்டிருக்காரு ரொம்ப நேரமா.

திடீர்னு தம்புராவோட ஒரு பாட்டுக் கேக்குது. நிமிந்து பாத்தா வைகுண்டத்துல வடை சாப்பிட்டுட்டுக் கைலாசத்துக்குக் காப்பி சாப்பிடப் போய்க்கிட்டுருக்காரு நாரதரு.

‘வாய்யா வாய்யா’ன்னாரு எமதர்மரு,

வந்தாரு நாரதரு.

“எனக்கொரு பிரச்சன” இழுத்தாரு எருமைகாரரு.

“என்ன? கள்ளக் கணக்கு எழுதிக் காசு சம்பாரிச்சு இந்திரலோக வங்கியில போட்டு ஏமாத்துறானா சித்ரகுப்தன்?”

“அட அதில்ல நாரதரே. பாவகணக்குப் பண்ணுனவக எண்ணிக்கை கூடிப்போச்சு; எடமில்ல நரகத்துல; என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்”.

“அட நீங்க ஒண்ணு… இவுகள நரகத்துல தள்ளணும் அவ்வுளவுதானே? நான் பறந்து பறந்து பாத்த அளவுல பூலோகத்துல இந்தியா இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகளப் பூரா அங்க வெவசாயம் பண்ண அனுப்பி வச்சீங்கன்னு வச்சீக்குங்க வேலை முடுஞ்சது.”

“ஆகா ஒம்மக் கட்டித் தழுவணும் போல இருக்கு”ன்னு எந்திருச்சாரு எமதருமரு.

தம்புராவத் தவற விட்டுட்டு ஓடி ஒளிஞ்சு போனாரு நாரதரு.

நாரதர் சொன்ன யோசனப்படி இந்தியாவுல விவசாயம் பண்ண நரகத்துல இருந்து அன்னைக்கு அனுப்பிவைக்க ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும்

நின்னபாடில்ல.

                            (மூன்றாம் உலகப் போர் - வைரமுத்து)

ஆரம்பத்தில் உதட்டில் புன்னகையை தவழ வைத்த வரிகள் இறுதியில் கண்ணளை கலங்க வைத்தது.

நாம் எல்லோரும் மெய்ட் இன் இந்தியாவா?

 


நாம் தினமும் உபயோகப்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுத் தயாரிப்புக்களாகவே உள்ளன. அதை நாம் பெரிதும் கண்டுக்கொள்வதில்லை. உதாரணமாக இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்யும் நாடுகளையும் பார்ப்போம்.

சோப்பு;

லக்ஸ் – ஐக்கிய இராஞ்சியம் (uk)

டவ் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

பியர்ஸ் – இங்கிலாந்த்

டெட்டால் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

லைபாய் – அமெரிக்கா

கைபேசி;

சாம்சங் – தென் கொரியா

நோக்கியா – பின்லாந்த்

மைக்ரோ சாப்ட் – அமெரிக்கா

பிலாக் பெரி – ஹங்கேரி

சொனி – ஜப்பான்

மடி கணினி;

ஹச்பி – ஐக்கிய இராஞ்சியம் (UK)

டெல் – ஐக்கிய இராஞ்சியம் (UK)

ஆப்பிள் – கலிபோர்னியா

வையோ – ஜப்பான்

லெனோவா – சீனா

தொலைக்காட்சி;

சோனி – ஜப்பான்

எல்ஜி – தென் கொரியா

பிலிப்ஸ் – நெதர்லாந்த்

ஹிடாச்சி – ஜப்பான்

சாம்ப்;

சன் சில்க் – ஐக்கிய இராஞ்சியம் (uk)

பேண்டீன் – சுஜர்லாந்து

ஹெட் அண்ட் சோல்ஜர்ஸ் – அமெரிக்கா

இப்படி நாம் உபயோகப்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் வெளிநாட்டின் தயாரிப்புகளாகவே உள்ளன. ஆனால் பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்கள் நாட்டின் தயாரிப்புகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. உதாரணமாக சீன மக்கள் சீன நாட்டின் தயாரிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகின்றன. அது போல ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது நமது கடமை. ஆனால் அவ்வாறு நாம் செய்வது இல்லை. இந்தியாவின் தயாரிப்புகளுக்கு இந்தியாவிலேயே முக்கியத்துவம் இல்லாத போது உலக அளவில் எவ்வாறு முக்கியத்துவம் பெறும்.

நாம் ஒரு பொருளை வாங்கும் போது அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று பார்ப்பதே இல்லை என்பதே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். இனிமேலாவது இந்தியாவின் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிப்போம்.