கள்ளும் முள்ளுமாக
நிறைந்திருந்தேன்;
மண்
சாலையாக மாற்றினார்கள்!
மண் சாலையாக இருந்தேன்;
தார் சாலையாக மாற்றினார்கள்!
தார் சாலையாக இருந்தேன்;
காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!
இப்படி எல்லாம்
மாறினாலும் – என்
மேனி மட்டும்
குளிகளாலே நிறைந்துள்ளது!
இது நான் செய்த
தவறா? இல்லை
என்னை
செய்தவர்களின் தவறா?
இப்படிக்கு,
கண்ணீருடன்
சாலை.

No comments:
Post a Comment