ஆசிரியர்கள் உன்னை
கண்டிப்பது
நீ துன்பப்பட வேண்டும் என்பதற்காக
அல்ல;
நீ வாழ்நாளில் வேறு எவராலும் கண்டிக்கப்பட்டுவிட
கூடாது என்பதற்காக தான்!
வேடிக்கையான ஆசிரியர்கள் உன்னை
மகிழ்விப்பது
நீ சிரிக்க வேண்டும் என்பதற்காக
மட்டும் அல்ல;
நீ வாழ்நாளில் வேறு எவருக்கும்
வேடிக்கையானவள்
ஆகி விடக் கூடாது என்பதற்காகத்
தான்!
எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடை
அணிவது
நீ பார்க்க வேண்டும் என்பதற்காக
அல்ல;
வாழ்நாளில் நீ எவ்வளவு உயர்ந்த
நிலைக்கு சென்றாலும்
பகட்டை விரும்பக் கூடாது என்பதகாகத்
தான்!
சில ஆசிரியர்கள் பாடத்தை புரியும்
படி நடத்துவது பாடத்தை
மட்டும் புரிந்துக் கொள்ள வேண்டும்
என்பதற்காக அல்ல;
வாழ்நாளில் உனக்கு எந்த துன்பங்கள்
வந்தாலும் அதை புரிந்து
எதிர் கொண்டு நடக்க வேண்டும் என்பதற்காகத்
தான்!
இந்நான்கையும் உணர்த்தும் எங்கள்
ஆசிரியர்கள்
எங்கள் வாழ்வின் நீங்காத நினைவு
சின்னங்கள் தான்!

No comments:
Post a Comment